Tuesday, December 10, 2013

இறையின் பிழை

நானும் எத்தனையோ முறை ரயிலில் மும்பைக்கு பயணம் செய்து இருக்குறேன். கூட்டத்தை தவிர வேறு ஒன்றும் நியாபகம் வைத்துக்கொள்ளும் படி இருந்தது இல்லை. ஆறு மாத இடைவெளிக்கு பின் மறுபடியும் மும்பை செல்வதற்காக காலை 6.30 மணி ரயிலை பிடிப்பதற்காக திருவான்மியூரிலிருந்து சென்னை எக்மோர் சென்றேன். வழக்கதிருக்கு மாறாக சிறிது நேரம் முன்னதகவே ரயில் நிலையத்தை அடைந்தேன்.

ஏதோ நான் மும்பைக்கே வந்ததை போல எங்கும் ஹிந்தி வாசனை , அவர்கள் பேசுவது ஹிந்தியா , மராத்தியா என்று கூட எனக்கு வித்தியாசம் தெரியாது. ரயிலில் ஏறுவதற்கு முன் முன்பதிவு லிஸ்ட் ஐ பார்த்தேன். எனது இருக்கை எஸ் 7 - 47 . 48 இல் ஒரு 50 வயது பெரியவர். 41 - 46 வரை எல்லாம் F 21 கல்பனா , சௌந்தரியா , மகேஷ் எனபெண்களின் பெயர்கள். ஆஹா சந்தோஷத்தில் காலையில் நான் விழித்த சக்தியின் முகம் வந்து சென்றது. ( என்ன டா அப்படி சந்தோஷம் , அப்படி என்ன கிழிக்க போற னு தான நினைக்குறீங்க ? ஒண்ணும் பண்ண போறது இல்ல தூரமா இருந்து பாத்துட்டு கீழ இறங்கிடுவேன்.) 

ரயில் கிளம்பியது. நானும் கையில் எடுத்து சென்ற சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு , செய்தி தாளை புரட்ட ஆரம்பித்தேன். அரக்கோணமும் கழிந்தது எக்மோர் இல் ஏற வேண்டிய பெண்கள் ஏறவே இல்லை. TTR உம் வந்து டிகெட் சரி செய்து விட்டு சென்று விட்டார். கொஞ்ச நேரம் சென்றது. ரயில் ரேணிகுண்டா வை நெருங்கி கொண்டு இருந்தது. நான் எதிர் பார்த்ததற்கு மாறாக RAC இல் இருந்த 6 அரவாணிகள் எனது பெட்டிக்கு மாற்ற பட்டனர். ஆஹா ஒருத்தர் கிட்ட மாட்டினாலே செதோம் இதுல இந்த கூட்டத்தில் மாட்டினோம் அவ்வளவு தான்.

அவர்கள் கையில் சரக்கு கடிக்க முறுக்கு , என தனது வழக்கமான கை தட்டல்களுடணும் , ஹிந்தியில் சில பல கெட்ட வார்த்தைகளுடணும் பேச ஆரம்பித்தனர். என்னிடமும் ஏதேதோ ஹிந்தியில் கேட்க நானும் எனக்கு தெரிந்த அரை குறை ஹிந்தியில் பதில் கூறினேன். பல முறை நான் பேசும் ஹிந்தி புரியாமல் என்னையும் திட்டி தீர்த்தனர். மறுபடியும் நான் காலையில் விழித்த அதே முகத்தை நினைத்து பார்த்தேன். இம்முறை மிகுந்த கோபத்துடன்.
இவர்களிடம் சிக்குவதை விட Dexter கொலைகளை பார்க்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் மப்பில் படுத்து விட்டனர். தற்செயலாக எனது laptop இல் இருந்த எனது குடும்ப போட்டோ வை பார்த்த ஒரு அரவாணி நீ தமிழா ? என்றார்.

என்ன பண்ணுற ? எங்க இருந்து வர ? என ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பித்தார். நானும் தயக்கத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்தேன். நானும் உண்ண மாதிரி engineer ஆவேன் னு நினச்சி தான் படிக்க ஆரம்பித்தேன். 8 வரை நன்றாகவே படித்தேன். அன்றாடம் வேலைக்கு செல்லும் எனது தந்தைக்கு அது ஒன்று மட்டும் தான் சந்தோசம். எனக்கு ஒரு தங்கயும் உண்டு. சிறிது காலத்தில் ஏற்பட்ட பருவ மாற்றத்தில் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரிய வில்லை. என்னிடம் சிறு வயதில் இருந்த பெண்மை குணம் வளர தொடங்கியது. படிப்பிலும் பின் தங்க ஆரம்பித்தேன். என் தாயும் எனது நடவடிக்கை கண்டு அடிக்க ஆரம்பித்தார். மன அழுத்தம் என்னை தின்ன ஆரம்பித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இப்படி ஒரு கூட்டத்துடன் சேர்ந்து கொண்டேன். எனது தங்கையை பார்த்து 20 வருடங்கள் ஆகின்றன. நான் இப்போது சென்றாள் கூட என்னை கண்டு அசிங்க பாடுவார்கள்.

இப்படி இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் இதே போல் ஒரு கதை இருக்கிறது. எங்களது மன வேதனையின் வெளிப்பாடு தான் நாங்கள் நடக்கும் விதம். கழுதை பண்ணி கூட குழந்தை பெத்து அத்த வழக்காணும் னு ஒரு குறிக்கொளோட வாழும். எங்களுக்கு எந்த ஒரு குறிக்கொளும் கிடையாது. இப்படி காஞ்சனா பட கதை மாதிரி என்ன என்னவோ பேசி முடித்தார். எண்னாக்கும் ஆச்சரியம். இவர்கள் இப்படியும் பேசுவார்களா என்று. ஆனால் அவர்கள் சொன்ன ஒவ்வொன்றும் உண்மை தான். ஒவ்வொரு அரவானியும் குழந்தை பருவத்தில் எல்லோரையும் போல அன்பு காட்டப்பட்டு வளர்ந்து ஒரு கட்டத்தில் கை விட பட்டவர்கள் தான். பருவ மாற்றத்தால் வாழ்க்கையை இழந்தவர்கள் தான். 

எவ்வளவோ செலவு செய்யும் நாம் ஒரு 5 ரூ கொடுப்பதற்கு கூட எவ்வளவோ நொந்து கொண்டது உண்டு. நம்மால் அவர்களுடன் சமுதாயத்தில் ஒன்றி வாழ முடியாது தான். ஒரு வேலை நம்முடன் பிரந்தால் என்ன செய்வோம் என்றும் சொல்ல முடிய வில்லை. ஆனால் மனதளவில் மிக பெரிய ஊனம் பட்ட அவர்களுக்கு நம்மால் இயன்ற 5 , 10 கொடுத்து உதவலாம் என நினைத்து கொண்டேன்.

No comments:

Post a Comment