Friday, December 20, 2013

அரசு தந்த பெயர்

             பள்ளி முடிந்து "அம்மா ... " என்று கோவமாக கத்தியவாறு உள்ளே நுழைந்தான் பத்தாம் வகுப்பு படிக்கும் ராமையா  .  "என்ன டா  ராமு நான் துணி துவைச்சுட்டு இருக்கேன் டா செல்லம் பின்னாடி வா ..." னு கத்தினாள் அவனது அம்மா ..
     கோபத்தில் இருந்தவன்  "இந்த கொஞ்சலுக்குளாம் குறைச்சல் இல்ல .. எனக்கு எவன் ராமையா னு பேரு வச்சான்?  எல்லாரும் என்ன தாண்டுடா ராமா  னு கிண்டல் பண்றாங்க ..."
   "இது தான் கோவமா எல்லாம் உங்க அப்பா தான் டா காரணம்....  நான் கூட என் அப்பா பேரு அழகையா னு வைக்கலாம் னு சொன்னேன் உங்க அப்பாவும் , பாட்டியும் தான் கேக்கவே இல்ல... " என்றதும் அவனுக்கு கோபம் பல மடங்கு எகிரியது.
"அம்மா கடுப்ப கிளப்பாதமா ..  அப்பா ஆஃபீஸ் ல இருந்து வந்தாச்சா ?"
"சரி பா நீ என் கிட்ட கோவ படாத உங்க அப்பா ஆஃபீஸ் ல இருந்து வந்த உடனே உங்க அப்பா கிட்டயே கேளு .. என்ன விட்டுடு .. "
       
            அவனது அப்பா வெங்கடேஷ் அந்நியன் மாதிரி எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்லி நான் தான் யோக்கியன் எவனுக்கும் லஞ்சம் குடுக்க மாட்டேன் என்று சொல்லி திரிபவன். ஆனா உண்மையில்  அவன் ஒரு மகா கஞ்சன். அரசு அலுவலகம் பக்கம் போகணும்னாலே அவனுக்கு பெரிய கஷ்டம்.
          இரவு 8 மணி அப்பாவின் வண்டி சத்தம் கேட்டது. அவனது செருப்பை கூட கலட்ட விட வில்லை. "எனக்கு யாருப்பா ராமையா னு பேரு வச்சது? "  என்று கோவம் கொஞ்சமும் குறையாமல் கேட்டான். அவனது அப்பா உங்க தாத்தா பேருடா .. ராசி யான பேரு.. உனக்கு இந்த பேரு வச்ச பின்னாடி தான் எனக்கு இந்த வேலை கிடைச்சுது.. நாம இந்த நிலைமைக்கு வந்தோம் .." என்று ஏதேதோ கூறி சமாதான படுத்த முயன்றான். ஆனால் அவனிடம் ஒரு பருப்பும் வேகல .. "ஒழுங்கா சொல்லு எனக்கு ஏன் இந்த பேர வச்ச???? "
         சமாளிக்க முடியாமல் நடந்தததை கூற ஆரம்பித்தான். உங்க பாட்டி
தான் எல்லாத்துக்கும் காரணம். அவங்க நீ பிறக்கும் போது உயிரோட
தான் இருந்தாங்க. உனக்கு எங்க அப்பா பேர ஸ்டைல் லா சுருக்கி ரமேஷ் னு
தான் தா வச்சோம். ஒரு நாள் நாங்க யாருமே வீட்டில இல்ல ..  ரேசன் கார்ட்
ல பேரு சேக்க வந்தாங்க .. உங்க பாட்டி வேற பழைய காலத்து ஆளா அவங்க
தாத்தா பெற சொல்ல மாட்டாங்க .. உன் பேர கேக்கும் போது தாத்தா பேரு னு
சொல்லிட்டாங்க .. வந்தவனும் பக்கத்துல உன் தாத்தா பேரு என்ன னு விசாரிச்சு ராமையா னு போட்டுட்டு போயிட்டான்.
        அதை பற்றி பெருசா எடுத்துக்காம நான் உனக்கு ஸ்கூல் ல ரமேஷ் னு தான் பேரு குடுத்து விட்டேன். நீ 5 வது படிக்கும் போது எதுக்கோ ரேஷன் கார்ட் கேட்டு விட்டாங்க .. அதுல வேற உன் பேரு ராமசாமி னு இருந்துசா.. ஸ்கூல் ல எப்படியாவது பேர மாத்திட்டு வாங்க னு சொன்னாங்க.. நானும் VAO ஆஃபீஸ் , RI ஆஃபீஸ் னு போனேன் .. எங்க போனாலும் என்னோட ஃபார்ம்ம கைல எடுத்தாங்களோ இல்லையோ கொடி காசு னு ஒரு உண்டியல் கைல தூக்கிடுறாங்க .. அவங்க பாசைல கொடி காசு நா என்ன தெரியுமா ? அரசு ஆஃபீஸ் ல லஞ்சத்துக்கு வச்சிருக்க பேரு அது. நம்ம நாட்டு கொடிய வச்சு பிச்சை எடுக்குறாங்க பாவிங்க .. நானும் காசு கொடுக்காம அங்க இங்க னு சுத்தி பாத்தேன் .. 1000 ரூ செலவு ஆகம பேரு மாறின மாதிரி தெரியல .. நேர உங்க HM கைல கால் ல விழுந்து உன் பெற ஸ்கூல் ஸர்டிஃபிகேட் ல மாதித்தேன்.. ஏதோ பள்ளி கூடம் கிரதால 50 ரூ ல பிரச்னை 
முடிஞ்சு போச்சு .. பாத்தியா அப்பாவோட சாமர்த்தியம்"  என்ற பூரிப்புடன் மகனை பார்த்தான்.. அவனது கோவதிற்கு அளவே இல்லாமல் போனது.. 50 ரூ ல நம்ம வாழ்க்கையவே இப்படி ஆச்சே.. 
        

Tuesday, December 10, 2013

இறையின் பிழை

நானும் எத்தனையோ முறை ரயிலில் மும்பைக்கு பயணம் செய்து இருக்குறேன். கூட்டத்தை தவிர வேறு ஒன்றும் நியாபகம் வைத்துக்கொள்ளும் படி இருந்தது இல்லை. ஆறு மாத இடைவெளிக்கு பின் மறுபடியும் மும்பை செல்வதற்காக காலை 6.30 மணி ரயிலை பிடிப்பதற்காக திருவான்மியூரிலிருந்து சென்னை எக்மோர் சென்றேன். வழக்கதிருக்கு மாறாக சிறிது நேரம் முன்னதகவே ரயில் நிலையத்தை அடைந்தேன்.

ஏதோ நான் மும்பைக்கே வந்ததை போல எங்கும் ஹிந்தி வாசனை , அவர்கள் பேசுவது ஹிந்தியா , மராத்தியா என்று கூட எனக்கு வித்தியாசம் தெரியாது. ரயிலில் ஏறுவதற்கு முன் முன்பதிவு லிஸ்ட் ஐ பார்த்தேன். எனது இருக்கை எஸ் 7 - 47 . 48 இல் ஒரு 50 வயது பெரியவர். 41 - 46 வரை எல்லாம் F 21 கல்பனா , சௌந்தரியா , மகேஷ் எனபெண்களின் பெயர்கள். ஆஹா சந்தோஷத்தில் காலையில் நான் விழித்த சக்தியின் முகம் வந்து சென்றது. ( என்ன டா அப்படி சந்தோஷம் , அப்படி என்ன கிழிக்க போற னு தான நினைக்குறீங்க ? ஒண்ணும் பண்ண போறது இல்ல தூரமா இருந்து பாத்துட்டு கீழ இறங்கிடுவேன்.) 

ரயில் கிளம்பியது. நானும் கையில் எடுத்து சென்ற சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு , செய்தி தாளை புரட்ட ஆரம்பித்தேன். அரக்கோணமும் கழிந்தது எக்மோர் இல் ஏற வேண்டிய பெண்கள் ஏறவே இல்லை. TTR உம் வந்து டிகெட் சரி செய்து விட்டு சென்று விட்டார். கொஞ்ச நேரம் சென்றது. ரயில் ரேணிகுண்டா வை நெருங்கி கொண்டு இருந்தது. நான் எதிர் பார்த்ததற்கு மாறாக RAC இல் இருந்த 6 அரவாணிகள் எனது பெட்டிக்கு மாற்ற பட்டனர். ஆஹா ஒருத்தர் கிட்ட மாட்டினாலே செதோம் இதுல இந்த கூட்டத்தில் மாட்டினோம் அவ்வளவு தான்.

அவர்கள் கையில் சரக்கு கடிக்க முறுக்கு , என தனது வழக்கமான கை தட்டல்களுடணும் , ஹிந்தியில் சில பல கெட்ட வார்த்தைகளுடணும் பேச ஆரம்பித்தனர். என்னிடமும் ஏதேதோ ஹிந்தியில் கேட்க நானும் எனக்கு தெரிந்த அரை குறை ஹிந்தியில் பதில் கூறினேன். பல முறை நான் பேசும் ஹிந்தி புரியாமல் என்னையும் திட்டி தீர்த்தனர். மறுபடியும் நான் காலையில் விழித்த அதே முகத்தை நினைத்து பார்த்தேன். இம்முறை மிகுந்த கோபத்துடன்.
இவர்களிடம் சிக்குவதை விட Dexter கொலைகளை பார்க்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் மப்பில் படுத்து விட்டனர். தற்செயலாக எனது laptop இல் இருந்த எனது குடும்ப போட்டோ வை பார்த்த ஒரு அரவாணி நீ தமிழா ? என்றார்.

என்ன பண்ணுற ? எங்க இருந்து வர ? என ஒவ்வொன்றாக கேட்க ஆரம்பித்தார். நானும் தயக்கத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்தேன். நானும் உண்ண மாதிரி engineer ஆவேன் னு நினச்சி தான் படிக்க ஆரம்பித்தேன். 8 வரை நன்றாகவே படித்தேன். அன்றாடம் வேலைக்கு செல்லும் எனது தந்தைக்கு அது ஒன்று மட்டும் தான் சந்தோசம். எனக்கு ஒரு தங்கயும் உண்டு. சிறிது காலத்தில் ஏற்பட்ட பருவ மாற்றத்தில் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரிய வில்லை. என்னிடம் சிறு வயதில் இருந்த பெண்மை குணம் வளர தொடங்கியது. படிப்பிலும் பின் தங்க ஆரம்பித்தேன். என் தாயும் எனது நடவடிக்கை கண்டு அடிக்க ஆரம்பித்தார். மன அழுத்தம் என்னை தின்ன ஆரம்பித்தது. என்ன செய்வது என்று தெரியாமல் இப்படி ஒரு கூட்டத்துடன் சேர்ந்து கொண்டேன். எனது தங்கையை பார்த்து 20 வருடங்கள் ஆகின்றன. நான் இப்போது சென்றாள் கூட என்னை கண்டு அசிங்க பாடுவார்கள்.

இப்படி இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் இதே போல் ஒரு கதை இருக்கிறது. எங்களது மன வேதனையின் வெளிப்பாடு தான் நாங்கள் நடக்கும் விதம். கழுதை பண்ணி கூட குழந்தை பெத்து அத்த வழக்காணும் னு ஒரு குறிக்கொளோட வாழும். எங்களுக்கு எந்த ஒரு குறிக்கொளும் கிடையாது. இப்படி காஞ்சனா பட கதை மாதிரி என்ன என்னவோ பேசி முடித்தார். எண்னாக்கும் ஆச்சரியம். இவர்கள் இப்படியும் பேசுவார்களா என்று. ஆனால் அவர்கள் சொன்ன ஒவ்வொன்றும் உண்மை தான். ஒவ்வொரு அரவானியும் குழந்தை பருவத்தில் எல்லோரையும் போல அன்பு காட்டப்பட்டு வளர்ந்து ஒரு கட்டத்தில் கை விட பட்டவர்கள் தான். பருவ மாற்றத்தால் வாழ்க்கையை இழந்தவர்கள் தான். 

எவ்வளவோ செலவு செய்யும் நாம் ஒரு 5 ரூ கொடுப்பதற்கு கூட எவ்வளவோ நொந்து கொண்டது உண்டு. நம்மால் அவர்களுடன் சமுதாயத்தில் ஒன்றி வாழ முடியாது தான். ஒரு வேலை நம்முடன் பிரந்தால் என்ன செய்வோம் என்றும் சொல்ல முடிய வில்லை. ஆனால் மனதளவில் மிக பெரிய ஊனம் பட்ட அவர்களுக்கு நம்மால் இயன்ற 5 , 10 கொடுத்து உதவலாம் என நினைத்து கொண்டேன்.

முதல் பதிப்பு

                கல்லூரி படிப்பை முடித்து விட்டு கால் லெடர் காக காத்து கொண்டிருந்தான் ராஜா. கல்லூரி நாளில் தன்னை களாய்த்து தள்ளும் பிரேம் , ஜெய் போன்ற நண்பர்களிடம் இருந்து தப்பினோம் என்ற பெரு மூச்சு ஒரு புறம் இருக்க , இதெல்லாம் இனி எப்போது நடக்க போகிறது என்ற வருத்ததுடன் தனது கல்லூரி நாளை நினைத்து கொண்டும் கை விரல்கள் Remote இல் உள்ள button களை சரி பார்த்து கொண்டும் , தனியாக தனது விடுமுறை நாளை வெறுப்புடன் கழித்து கொண்டு இருந்தான். அவனுக்கு ஒரே ஆறுதல் தான் புதிதாக வாங்கிய NOKIA 1100 mobile தான். அதற்கு தண்ணீர் படாமல் இருக்க lamination cover , அதுக்கு மேல ஒரு safety pouch னு அம்மன் கோவில்ல கூழ் ஊத்துற மாதிரி சந்தன பொட்டும் குங்குமமும் தான் மிச்சம்.
                 திடீர்னு அவனோட SMS ரிங்டொன் கேக்க , மொபைல் ஸ்க்ரீன் பளிச்சுணு எறின்சுது. மொபைல் வாங்கிய நாள் முதல் கேம் மட்டுமே விளையாடிய அவன் தானக்க்கு SMS அனுப்பியது யாரு னு பாக்க அவசரமாக வந்து பார்த்தான் . பார்த்த அந்த கணம் அவனது அரை குறை கண்கள் 100000 wts பல்ப் மாதிரி எறின்சுது. அவனது மனத்தில் எழுந்த சந்தோசங்களை எனது வார்த்தைகளால் நிரப்ப முடியாததற்கு வருந்துகிறேன் .....
                அவனது அளவு கடந்த சந்தாசத்திற்கு காரணம் அவன் கல்லூரியில் sight அடித்த அந்த தோழியிடம் இருந்து வந்த அந்த 2 எழுத்து "Hi ...." என்ற மெஸேஜ் தான். யாருக்கோ அனுப்பியது நமக்கு வந்துடுச்சொங்கற உள் எண்ணத்தில் அவனும் "Hi Rekha ..." னு தயக்கத்துடன் பதில் அனுப்பினான். ஆனால் எதிர் பார்த்ததார்க்கு மாறாக , "How are you Raja ? How is ur vacation" னு வந்த மெஸேஜ் ஐ பார்த்து தலை கால் புரியாமல் குதித்தான் … ஃப்ரெஂட்ஸ் கு மிஸ்ட் கால் விடும் போது தெரியாமல் அடெஂட் ஆச்சு னா ஆகுற 1 ps போச்சு என்று வருகிற மெஸேஜ் ஐ பார்த்து வருந்திய அந்த கண்களுக்கு 50 ps / SMS என்பது தெரியவே இல்லை … ஆனாலும் தன்னிடம் இருக்கும் balance தீரும் வரை SMS அனுப்பினான் … சில நேரத்தில் “உண்ணாக்கு மெஸேஜ் கு காசு ல .. So dont waste your balance , I will message you ltr” … னு வந்த மெஸ்சகை பார்த்து நமது மீது எவ்வளவு அக்கறை என்று எண்ணிய ராஜா கொஞ்ச நேரத்தில் பூஸ்‌டர் போட்டு  தனது கடலையை தொடங்கினான் … ஓரிரு நாட்கள் Good morning ஆர்மிபித்து குட் நைட் வரை SMS  லே கழிின்சூது ....
            ஒரு நாள் மதியம் எப்படியாவது பேசி விட வேண்டும் என்ற எண்ணத்தில் கால் பண்ணினான் , காலை கட் செய்த தோழி “அம்மா , அப்பா பக்கத்து ல இருக்குறாங்க .. .’dont try to call ” னு . மட்டும் வந்தது , அதையும் பொறுத்துக்கொண்ட ராஜா .. இரவு 9 மணிக்கு “Is any body around you ?" என தான் அனுப்பிய மெஸேஜ் கு reply எதுவும் வராததால் , மறு நாளில் இருந்து தனது . ஐயே தொடர்ந்தான். சில நாட்களும் ஓடின .. ராஜா அன்று முதல் 3 வேலை குளித்தான் , 4 வேலை பால் விளக்கினான் .. என் என்று கேக்காதீர்கள் எனக்கும் தெரிய வில்லை … 
சில வாரங்கள் நொடி பொழுதில் கழிந்தன TCS கால் லெடர் உம் வந்தது … அவன் aug 11th மும்பை ல join பண்ண வேண்டியதாயிற்று .. தனது நண்பர்களை மறுபடியும் சந்திக்க போகிறோம் என்ற ஸந்தொஸதில் அது வரை தோன்றாத அந்த எண்ணம் தோன்றியது .. தந்து தோழி கு STD பூத் இல் இருந்து தெரியாதவன் போல் கால் பண்ணினான் … 
தனது தோழி கால் அடெஂட் பண்ண எடுத்து கொண்ட சில நொடிகள் வருடங்கள் போல் ஓடியது … கால் அடெஂட் பண்ணியவுடன் அந்த குரலை கேட்ட ராஜா உக்கு 1980’s எஃபெக்ட் ல கடல் அலை நின்னு போச்சு , பறவைகள் லாம் வானத்துல அப்படியே நின்னுடுச்சு .. என் னா ஆபொஸிட் ஸைட் பேசிய அந்த குரல் தனது கல்லூரி நண்பன் நந்தா … அவன் தான் அவ்வளவு நாட்களாக . அனுப்பியது .. அப்போது தான் அவனது மூளைக்குக்கு எட்டியது ஒரு . இல் தனது நண்பன் செல்லை வைத்து ஏதோ பண்ணியது … அடுத்து அவன் சொன்னான் செய்தி அவனை காதல் பரத் மாதிரி ஆக்கித்ுச்சு .. மேட்டர் என்ன நா … நந்தா தன்னாக்கு அனுப்பிய மெஸேஜ் ஐ அவனை அதிகம் காலாய்க்கும் பிரேம் , ஜெய் க்கும் ஃபார்வர்ட் பண்ணினான் என்பது தான் …. இப்படி தான் பலரும் தான் ஃபிகர் போச்சு னு வருந்தூரத்த விட ஃப்ரெஂட்ஸ் களைப்பாங்க னு தான் ரொம்ப வருத்த பாடுராங்க … 
இதற்கு மேல் . ல போயும் தன்னை களாய்த்து தள்ளுவார்காளே என்ற எண்ணத்தில் இருந்தான் ராஜா ... அடுத்த சில நிமிடத்தில் மறுபடியும் . . ஒலித்தது .. எடுத்து பார்த்தால் "Hi Raja ... This is Jothi .. How are you .. ? . அவனது கண் விழிகள் என்ன செய்வது என பிததிங்கின …